அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி பணிகளில் தவறா... நடவடிக்கை உறுதி என்கிறார் நேரு!

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:''நகர்ப்புற உள்ளாட்சி பணிகளில் தவறு நடந்திருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில்
 உள்ளாட்சி பணிகளில் தவறா... நடவடிக்கை உறுதி என்கிறார் நேரு!

சென்னை:''நகர்ப்புற உள்ளாட்சி பணிகளில் தவறு நடந்திருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.

கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது.


'டெண்டர்'ரத்து

அமைச்சர் நேரு, துறையின் தற்போதைய செயல்பாடுகளைக் கேட்டறிந்தார். துறை செயலர் சிவ்தாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின், அமைச்சர் நேரு அளித்த பேட்டி:முதல்வர் ஸ்டாலின், முன்பு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, துறையில் நடந்த தவறுகள் குறித்து விசாரிக்க, கவர்னரிடம் புகார் அளித்தார். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இது குறித்த விபரங்கள், லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தவறு இருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.கோவையில் குளத்தின் சுற்றளவு குறைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கரையை பலப்படுத்தும்போது, கான்கிரீட் சுவர் எழுப்பி உள்ளனர்.

இனி கான்கிரீட் கரை அமைக்காமல், மண் கரை அமைக்கப்படும். டெண்டரில் முறைகேடு நடந்தால், அவை ரத்து Jசெய்யப்படும். சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்படும். வாய்க்கால்களை துார் வாரி வருகிறோம். சென்னையில் தண்ணீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


அறிவிப்பு

'ஜல் ஜீவன்' திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இத்திட்டம் குறித்தும், தேர்தல் அறிக்கையில் கூறியபடி, புதிய மாநகராட்சி, நகராட்சிகளை துவக்குவது குறித்தும் முதல்வர் அறிவிப்பார். உள்ளாட்சி தேர்தல் பணிகள், முதல்வர் அறிவித்த பின் துவக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
22-ஜூலை-202112:51:53 IST Report Abuse
RajanRajan தமிழக ஊராட்சி ஒன்றிய ஆட்சியிலே எந்த ஒரு துறையாவது லஞ்ச ஊழல் இல்லாமல் நிர்வாகம் நடந்தால் அதற்கு ஒரு கின்னஸ் அவார்ட் கொடுக்கலாம். அட போங்க அன்னே எங்களுக்கு அவரது எல்லாம் வோணம் ஆனால் தொடர் லஞ்ச ஊழல் அனுமதி இருந்தால் அது போதுமே. ஏன் வெட்டி பேச்சு அவார்ட் கதை எல்லாம். இரு திராவிட கட்சிகளுமே ஒரே கொள்ளிக்கட்டை தான் என்பதில் மாற்று கருத்தே இல்லை. வாழ்க அண்ணா நாமம் தயிர் வடை நாமம்.
Rate this:
Cancel
ராஜா - Chennai,இந்தியா
22-ஜூலை-202112:18:34 IST Report Abuse
ராஜா இதை இவர் சொல்லக்கேட்கும் போது சிரிப்பு தான் வருது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
22-ஜூலை-202107:54:39 IST Report Abuse
RajanRajan ஓ அப்போ தவறுக்கு நடவடிக்கை என்று மாலை போட்டுக்குவானுங்களாக்கும். சாபஸ்டோய் இனி தவறே நடக்காத நிர்வாகமாயிடுமோ என்னவோ. ஓ காட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X