பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் இருட்டடிப்பா? மணிரத்னம் மீது புகார்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:மணிரத்னம் இயக்கி வரும், பொன்னியின் செல்வன் படத்தில், தமிழ் இருட்டடிப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.தமிழில் சிறந்த படைப்புகளில் ஒன்று கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல்.இதை படமாக எடுக்க, எம்.ஜி.ஆர்., - சிவாஜி, கமல் உள்ளிட்ட பலர் முயன்றனர். அது நடக்காத நிலையில், பொன்னியின் செல்வன் கதையை படமாக்க, மணிரத்னம் களமிறங்கினார். படத்தை 'லைக்கா'
 தமிழ் இருட்டடிப்பா? மணிரத்னம் மீது புகார்

சென்னை:மணிரத்னம் இயக்கி வரும், பொன்னியின் செல்வன் படத்தில், தமிழ் இருட்டடிப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழில் சிறந்த படைப்புகளில் ஒன்று கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல்.இதை படமாக எடுக்க, எம்.ஜி.ஆர்., - சிவாஜி, கமல் உள்ளிட்ட பலர் முயன்றனர். அது நடக்காத நிலையில், பொன்னியின் செல்வன் கதையை படமாக்க, மணிரத்னம் களமிறங்கினார்.

படத்தை 'லைக்கா' தயாரிக்கிறது.இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, விக்ரம் பிரபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்தை, பாகுபலி போல், இரண்டு பாகமாக வெளியிடுகின்றனர்.முதல் பாகத்தின் போஸ்டரை வெளியிட்டபோது, அதில் படத்தின் பெயரான, பொன்னியின் செல்வன் என்பதை ஆங்கிலத்தில், PS- 1 என இடம்பெறச் செய்துள்ளனர்.

தமிழ் மொழியின் பெருமைகளில் ஒன்றான பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கும் போது, அதன் நிஜ பெயரை இருட்டடிப்பு செய்வது நியாயமா என, தமிழ் ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். தலைப்பிலேயே தமிழை காணோம் என்ற நிலையில், படத்தில் என்ன செய்துள்ளனரோ என, இப்போதே பலருக்கும் கவலை தொற்றியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X