புதுடில்லி: பஞ்சாப் காங். தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, 23 ம் தேதி பொறுப்பேற்க உள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் முதல்வர் அமிரீந்தர்சிங் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.இந்நிலையில் முதல்வர் அமிரீந்தர்சிங்கிற்கும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
![]()
|
இந்நிலையில் வரும் 23-ம் தேதி சித்து பஞ்சாப் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார். இதையொட்டி விழாவில் பங்கேற்க வருமாறு அமிரீந்தர்சிங்கிற்கும் சித்து அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவர் பங்கேற்பாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அமிரீந்தர் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement