அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பா.ஜ., நிர்வாகிக்கு ரயில்வே குழுவில் பதவி

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:தேசிய அளவிலான ரயில் பயணியர் வசதிகள் குழுவில், தமிழக பா.ஜ., நிர்வாகி ரவிச்சந்திரன், உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணியருக்கு செய்ய வேண்டிய வசதிகளை ஆய்வு செய்வதற்காக, தேசிய அளவில், ரயில் பயணியர் வசதிகள் குழு, மத்திய ரயில்வே துறை சார்பில் அமைக்கப்படும்.தற்போது, அந்த குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குழுத் தலைவராக
 தமிழக பா.ஜ., நிர்வாகிக்கு  ரயில்வே குழுவில் பதவி

சென்னை:தேசிய அளவிலான ரயில் பயணியர் வசதிகள் குழுவில், தமிழக பா.ஜ., நிர்வாகி ரவிச்சந்திரன், உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணியருக்கு செய்ய வேண்டிய வசதிகளை ஆய்வு செய்வதற்காக, தேசிய அளவில், ரயில் பயணியர் வசதிகள் குழு, மத்திய ரயில்வே துறை சார்பில் அமைக்கப்படும்.தற்போது, அந்த குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குழுத் தலைவராக கிருஷ்ணதாஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழுவில், 25 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் இருந்து, சென்னையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக பா.ஜ., ஊடகப்பிரிவு பொறுப்பாளராக உள்ளார்.இக்குழு உறுப்பினர்கள், இரண்டு ஆண்டுகள் இப்பொறுப்பில் இருப்பர். இக்குழு ரயில் நிலையங்களுக்கு சென்று, அங்கு பயணியருக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்யும்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.NATARAJAN - ABU DHABI,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூலை-202112:13:31 IST Report Abuse
N.NATARAJAN வாழ்த்துக்கள் மாண்புமிகு பிரதமர் திரு. மோடி பார்வையிட்ட சுற்றுலாத் தலமான மகாபலிபுரம் இன்றுவரை ரயில்வே இணைப்பு இல்லை. செங்கல்பட்டு முதல் மகாபலிபுரம் மற்றும் கல்பாக்கம் வரை ரயில் பாதை தேவை.
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் காலை எட்டுமணிக்கு புறப்பட்டு மாலை நாலு மணிக்கு கன்னியாகுமரி சென்றடையலாம் சுற்றுலா பயணிகள் கடற்கரை சென்று சூரிய அஸ்தமனம் சந்திரோதயம் ஒருசேர கண்டு களிக்கலாம் இரவு தங்கி மறுநாள் காலை சூரியோதயம் கண்டு களித்து விட்டு அதே எட்டு மணிக்கு புறப்பட்டு மாலை நாலு மணிக்கெல்லாம் சென்னை வந்து சேரலாம் கன்னியாகுமரியில் சுற்றுலா வர்த்தகம் கொழிக்கும் தமிழக பகுதியான (அவர்கள் மொழியில் கொங்குநாட்டில்) சேலம் பெங்களுரு லைன் இப்போது கர்நாடக மாநில கட்டுப் பாட்டில் உள்ளது அதை சேலம் ரயில்வே டிவிஷனுக்கு மாற்ற இவர் ரயில் மந்திரியிடம் பேசி ஏற்பாடு செய்ய வேண்டும் தமிழர்கள் அந்த பகுதியில் பணியில் அமர்வார்கள்
Rate this:
kannan - chennai,இந்தியா
23-ஜூலை-202117:51:09 IST Report Abuse
kannanதமிழர்களை ரயில்வே பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற சொல்லுங்கள். கண்ணன் சென்னை...
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
22-ஜூலை-202117:00:22 IST Report Abuse
vpurushothaman நல்ல வசதி செய்து குடுங்க சார் - தாமரை வளரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X