அரசியல் செய்தி

தமிழ்நாடு

பணிமாறுதலில் தவறான வழி:நடவடிக்கை எடுக்கப்படும் :அமைச்சர் வேலு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:'பணிமாறுதலில் யாராவது தவறான வழியில் ஈடுபட்டு இருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு கூறியுள்ளார்.அவரது அறிக்கை:நான் அமைச்சர் பொறுப்பு ஏற்றவுடன், முதலில் பொறியாளர் சங்க நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி 'பணி மாற்றத்திற்கு யாரும் லஞ்சம் கொடுக்க கூடாது' என்று அறிவுரை வழங்கினேன்.பிற துறைகளில் உள்ள

சென்னை:'பணிமாறுதலில் யாராவது தவறான வழியில் ஈடுபட்டு இருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:நான் அமைச்சர் பொறுப்பு ஏற்றவுடன், முதலில் பொறியாளர் சங்க நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி 'பணி மாற்றத்திற்கு யாரும் லஞ்சம் கொடுக்க கூடாது' என்று அறிவுரை வழங்கினேன்.பிற துறைகளில் உள்ள மாறுதல் நடைமுறையை, நெடுஞ்சாலைத் துறையில் கடைப்பிடிக்க இயலாது.

கலந்தாய்வு முறையில் மாறுதல் வழங்கினால், பணிமூப்பு அடிப்படையில், மூத்த அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் அனைவரும், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து, மாறுதல் உத்தரவு பெற்று விடுவர். இதனால், மூத்த அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை, மற்ற பிரிவு பணிகளுக்கு பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும்.

தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், கோட்ட பொறியாளர்களுக்கு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, இது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள் 'மாறுதல் வேண்டி யாரிடமும் லஞ்சம் கொடுக்கக் கூடாது' என்றும், 'அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடக் கூடாது' என்றும் கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து, மாறுதலுக்கு உரிய விண்ணப்பம் வழங்கப்பட்டது. மாறுதலுக்கு மூன்று இடங்களை தெரிவிக்குமாறு, அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதன், அடிப்படையில், எவ்வித குற்றச்சாட்டுகளுக்கு இடமில்லாமல், வெளிப்படையான அணுகுமுறையில் மாறுதல் வழங்கப்பட்டது.நெடுஞ்சாலைத் துறை இடமாறுதல் உத்தரவு அனைத்தும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் யாராவது, தவறான வழியில் ஈடுபட்டு இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X