பொது செய்தி

தமிழ்நாடு

விதிமுறை மீறி பிளக்ஸ் வைப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மடத்துக்குளம் : மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில், விதிமுறை மீறியும், போக்குவரத்துக்கு இடையூறாக பிளக்ஸ் அமைக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோவை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் மடத்துக்குளம் நால்ரோடு அமைந்துள்ளது. இங்கு அரசு மருத்துவமனை, வங்கிகள், ஏ.டி.எம்.,கள், பேக்கரிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன.இது தவிர, கணியூர்,

மடத்துக்குளம் : மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில், விதிமுறை மீறியும், போக்குவரத்துக்கு இடையூறாக பிளக்ஸ் அமைக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கோவை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் மடத்துக்குளம் நால்ரோடு அமைந்துள்ளது. இங்கு அரசு மருத்துவமனை, வங்கிகள், ஏ.டி.எம்.,கள், பேக்கரிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன.இது தவிர, கணியூர், துங்காவி, கொமரலிங்கம், கொழுமம், உள்ளிட்ட குறு நகரங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களையும் இணைக்கும் ரோடுகள் சந்திக்கும் இடமாக, நால்ரோடு உள்ளது.நிமிடத்திற்கு, 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்தப்பகுதியை கடந்து செல்கின்றன.

மக்கள் கூட்டமும், வாகன பரபரப்பும் உள்ள இடத்தில் பலரையும் பாதிக்கும் விதமாக போக்குவரத்திற்கு இடையூறாகவும், விதிமுறையை மீறியும் பிளக்ஸ்கள் அமைக்கப்படுகின்றன. அரசு மருத்துவமனை மற்றும் கண்காணிப்பு கேமராக்களை மறைத்தும் பிளக்ஸ் வைத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கணியூர் ரோட்டிலிருந்து வரும் டிரைவர்களுக்கு பக்கவாட்டில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் நிலைதடுமாறி விபத்துக்கள் நடக்கிறது.

இது தவிர, கண்காணிப்பு கேமராக்களை மறைக்கும் விதமாகவும் பிளக்ஸ் அமைக்கப் பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக, பிளக்ஸ் அமைக்கக்கூடாது என கோர்ட் உத்தரவு உள்ள நிலையில், இந்தப்பகுதியில் தொடர்ந்து பிளக்ஸ் கலாசாரம் நீடிக்கிறது.இதற்குத்தீர்வாக இந்த பிளக்ஸ்களை அப்புறப்படுத்துவதோடு, இனி அவற்றை வைக்க அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X