சந்தன மரங்களை காக்க தனிச்சரகம் வேணுங்க!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சந்தன மரங்களை காக்க தனிச்சரகம் வேணுங்க!

Added : ஜூலை 21, 2021
Share
உடுமலை : உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், சந்தன மரங்களை பாதுகாக்க, வனத்துறையில், கூடுதல் பணியாளர்கள் நியமித்து, தனிச்சரகம் உருவாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியில், சந்தன மரங்கள் அதிகளவு உள்ளன. கடல் மட்டத்திலிருந்து, 1,252 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நாரைக்கால், கள்ளிமரத்துப்பட்டி, மாவடப்பு,

உடுமலை : உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், சந்தன மரங்களை பாதுகாக்க, வனத்துறையில், கூடுதல் பணியாளர்கள் நியமித்து, தனிச்சரகம் உருவாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியில், சந்தன மரங்கள் அதிகளவு உள்ளன. கடல் மட்டத்திலிருந்து, 1,252 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நாரைக்கால், கள்ளிமரத்துப்பட்டி, மாவடப்பு, குழிப்பட்டி, சின்னாறு வனச்சரக எல்லை போன்ற பகுதிகளில் இயற்கையாகவே சந்தன மரங்கள் அதிகளவு காணப்படுகின்றன.கடந்த, 2009ல், கடத்தல் கும்பலால், அதிகளவு மரங்கள் வெட்டிக்கடத்தப்பட்டன. வனத்துறை நடவடிக்கையால், அந்தாண்டு மட்டும், 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகள், பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, குறிப்பிட்ட இடைவெளியில், வனப்பகுதியில், கேமரா வைத்து கண்காணிப்பு செய்யப்பட்டது.இருப்பினும், அரிய வகை சந்தனமரங்களுக்கு ஆபத்து காணப்படும் நிலையில், பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், வனத்துறையினர் திணறி வருகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வாக, சந்தன மரங்களை பாதுகாக்க மட்டும், வனத்துறையில், தனிச்சரகம் துவக்கி, பணியாளர்களை நியமிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

கேரளா மறையூரில், சந்தன மரங்களுக்கென தனிச்சரகம் அமைக்கப்பட்டு, மரங்கள் பாதுகாக்கப்படுகிறது.நன்கு முதிர்ந்த மரங்களை அம்மாநில அரசே, வெட்டி ஏலத்தில் விடுகிறது.இதனால், அரசுக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், சந்தன மரங்கள் வாயிலாக, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.எனவே, தமிழக அரசு, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட அனைத்து வனச்சரகங்களிலும், சந்தன மரங்களை பாதுகாக்க, தனிச்சரகத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X