பொது செய்தி

தமிழ்நாடு

கான்ட்ராக்டர்களுக்கு ஆதாயம் கட்டட வடிவமைப்பில் தில்லுமுல்லு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை:ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக, அரசு கட்டடங்கள் கட்டுமான வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டு, பொதுப்பணித் துறையால் நுாதன முறையில், அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.பொதுப்பணித் துறை வாயிலாக, பல்வேறு அரசு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு, ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படுகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் கட்டுமானப் பொருட்களுக்கு விலை

சென்னை:ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக, அரசு கட்டடங்கள் கட்டுமான வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டு, பொதுப்பணித் துறையால் நுாதன முறையில், அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.பொதுப்பணித் துறை வாயிலாக, பல்வேறு அரசு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு, ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் கட்டுமானப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில், புதிய கட்டடங்களுக்கு, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வராக இருந்த பழனிசாமி., கட்டுப்பாட்டில் பொதுப்பணித் துறை இருந்தது. எனவே, துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

பொதுப்பணித் துறையில் திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு, சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. இந்த பிரிவிற்கு, மாநிலம் முழுதும் போதிய அலுவலர்கள் இல்லை. அரசு கட்டடங்களை தரமான முறையில் கட்டுவதற்காக, இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ௧ கோடி ரூபாய்க்கு மேல், கட்டட பணிகளை மேற்கொள்வதற்கு, இப்பிரிவு வாயிலாகவே திட்ட மதிப்பீடு, கட்டட வரைபடம், வடிவமைப்பு உள்ளிட்டவை தயாரிக்கப்பட வேண்டும்.

அரசு நிதி ஒதுக்கீடு உறுதியானதும், கட்டட துாண்கள் எண்ணிக்கை குறைப்பு, துாண்களின் சுற்றளவு குறைப்பு, மேற்கூரை உயரம் குறைப்பு, அடித்தளத்தில், கட்டுமான கம்பி மற்றும், 'கான்கிரிட்' அளவு குறைப்பு என, கட்டட வடிவமைப்பில், ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக, ரகசியமாக சில பணிகள் செய்யப்படுகின்றன.இதனால், கட்டுமான செலவில், ஒப்பந்ததாரர்களுக்கு பல கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படுகிறது.

இதற்கு கைமாறாக, சில உதவிகளை, ஒப்பந்ததாரர்கள் வழங்குகின்றனர். இதை துறையின் முக்கியப்புள்ளி முதல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள உதவி பொறியாளர்கள் வரை பங்கிட்டு கொள்கின்றனர். இவ்வாறு, கட்டட வடிவமைப்பில் செய்யப்படும் நுாதன முறைகேடு காரணமாக, அரசின் நிதி பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு வருவது, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவ்வாறு, ஐந்து ஆண்டுகளில் பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.நாமக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலுார், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், நீலகிரி, நாகப்பட்டினம் ஆகிய, 11 மாவட்டங்களில், மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவ மனைகள் கட்டுமானப் பணிகள், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்துார், தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய, ஆறு மாவட்டங்களில், கலெக்டர் அலுவலகம் கட்டுமானப் பணிகள், தலா 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கின்றன.

சேலம் மாவட்டம் தலைவாசலில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு கால்நடை மருத்துவ கல்லுாரி கட்டடம் கட்டப்படுகிறது. இந்த கட்டடங்களின், வடிவமைப்புகளில் எல்லாம் நுாதன முறையில் முறைகேடு நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, உரிய ஆய்வுகள் மற்றும் விசாரணை நடத்தி, முறைகேடுகளுக்கு காரணமான, அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

வரும் காலங்களில் பல ஆண்டுகள் நீடித்து உழைக்கும் தரமான கட்டடங்கள் கட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.தலைமை பொறியாளர் அவசியம்! கட்டட வடிவமைப்பில் சிறிய மாற்றங்களை செய்து செலவுகளை குறைத்தாலும், கட்டடத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில், தங்களின் தொழில்நுட்ப அறிவை அரசுக்கு ஆதரவாக, அதிகாரிகள் செயல்படுத்தி இருந்தால் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை மிச்சப்படுத்தி இருக்க முடியும்.

திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவில் நடந்து வரும் நுாதன முறைகேடுகளை தடுப்பதற்கு, இப்பிரிவிற்கு தனியாக, தலைமை பொறியாளரை நியமிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மாநிலம் முழுதும் கூடுதல் பொறியாளர்களை நியமித்து பிரிவின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X