பொது செய்தி

இந்தியா

சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடத்த கோரிக்கை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
புதுடில்லி:'போன் ஒட்டு கேட்பு விவகாரம் பற்றி, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எடிட்டர்ஸ் கில்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக, நம் நாட்டைச்

புதுடில்லி:'போன் ஒட்டு கேட்பு விவகாரம் பற்றி, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

எடிட்டர்ஸ் கில்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக, நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, சமூக சேவகர்கள், உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உட்பட பல தரப்பினரது போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பல நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு, உளவு மென்பொருளை மட்டுமே வழங்கியதாக இஸ்ரேல் நிறுவனம் தெரிவித்துள்ளது.அதனால், இந்தியாவில் அரசு அமைப்புகள் தான், இந்த உளவு வேலையில் ஈடுபட்டதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால், இது பற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில், விசாரணை குழு அமைத்து, சுதந்திரமாக விசாரணை நடத்தினால் தான் உண்மைகள் தெரிய வரும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புகாரை விசாரிக்க இஸ்ரேல் குழுமேற்காசிய நாடான இஸ்ரேலின், 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக, நம் நாட்டின் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என, 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப் பட்டதாக, சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த புகார்கள் குறித்து விசாரிக்க, மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவை, இஸ்ரேல் அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில், இஸ்ரேல் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இடம்பெற்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X