பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு ஜோடி நெல்லூர் ஆடு ரூ.1.50 லட்சத்துக்கு விற்பனை

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ராணிப்பேட்டை :ராணிப்பேட்டை சந்தையில் ஒரு ஜோடி நெல்லுார் ஆடு, 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.பக்ரீத் பண்டிகையையொட்டி, ராணிப்பேட்டையில் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு துவங்கி நேற்று காலை 6:00 மணி வரை ஆட்டு சந்தை நடந்தது. வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லுாரில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தமிழகத்தைச்
ஒரு ஜோடி நெல்லுார் ஆடு ரூ.1.50 லட்சத்துக்கு விற்பனை


ராணிப்பேட்டை :ராணிப்பேட்டை சந்தையில் ஒரு ஜோடி நெல்லுார் ஆடு, 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.பக்ரீத் பண்டிகையையொட்டி, ராணிப்பேட்டையில் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு துவங்கி நேற்று காலை 6:00 மணி வரை ஆட்டு சந்தை நடந்தது. வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லுாரில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி ஆடு, 50 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. ஆந்திர மாநிலம் நெல்லுாரில் இருந்து விற்பனைக்கு வந்த ஒயிட் ரக ஆடுகள் ஒரு ஜோடி, 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.

நெல்லுார் ஆட்டு வியாபாரிகள் கூறியதாவது: நெல்லுார் ஒயிட் ரக ஆடு ஒன்றின் எடை, 25 கிலோ. கறிக்காகவே நன்றாக தீனி போட்டு வளர்க்கப்படுகிறது.ஆடுகளை மேய விடுவதில்லை. ஒயிட் ரக ஆட்டுக்கறி சுவை அதிகம் என்பதால், மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.ராணிப்பேட்டை, திருப்பத்துார், வேலுார் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில், 20 பகுதிகளில் நடந்த ஆட்டு சந்தைகளில், 25 கோடி ரூபாய்க்கு நெல்லுார் ஒயிட் ரக ஆடுகள் விற்பனையாகி உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-ஜூலை-202117:41:07 IST Report Abuse
Natarajan Ramanathan தியாகம் என்பது நாமே செய்ய வேண்டும். நமக்காக வேறு ஒரு உயிரை பலியிடுவது பித்தலாட்டம். அதுவும் வாயில்லா அப்பாவி ஜீவன்களை கொன்று அதில் புண்ணியம் தேடுவது அயோக்கியத்தனம்தான்.
Rate this:
Cancel
rauf thaseem - mawanella,இலங்கை
23-ஜூலை-202106:01:32 IST Report Abuse
rauf  thaseem குர்பானி கொடுத்து ஏழை மக்களுக்கும் விநியோகிக்கும் கடமை பக்ரீத்தில் முக்கியம் இங்கு இலங்கையில் ஆடு விலை அதிகம் என்பதால் மாட்டிறைச்சி அதிகம் சாப்பிடுவதால் மாடுதான் குர்பானி கொடுக்க படுகிறது ,ஒரு மாட்டை சுமார் 100 பேருக்கு பங்கு வைக்கலாம் , ஒரு மாடு கொடுக்க வசதி இல்லாதவங்க 7 பேர் வரை சேர்ந்து கொடுப்பார் ஆடு கூட்டு சேரமுடியாது தனியாள் தான் கொடுக்கவேண்டும் இது 5000 ஆண்டுக்கு முன்பு எபிரஹாம் தனது மகனை பலியிட வந்தபோது கடவுள் கொடுத்த மாற்று வழி
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
23-ஜூலை-202104:32:12 IST Report Abuse
meenakshisundaram இம்பூட்டு ரூவா கொடுத்து வாங்கிட்டு சாப்பிட்டு விட்டு எப்படித்தான் நிம்மதியா உறங்குவீங்களோ ?இல்லாதோருக்கு தானம் சேய்யுங்கள் .அது உங்களையும் தலைமுறையினரையும் வாழ செய்யும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X