சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பறிமுதல் செய்த 2,118 மதுபாட்டில்கள் அழிப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மடத்துக்குளம் : மடத்துக்குளம் மற்றும் கொமரலிங்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், பறிமுதல் செய்யப்பட்ட 2,118 மது பாட்டில் அழிக்கப்பட்டன. கொரோனா பாதிப்பால் கடந்த மாதம் வரை, தளர்வு இல்லாத ஊரடங்கு அமலில் இருந்தது. இதற்கு பின்பு சில தளர்வுகள் ஏற்படுத்தி, திண்டுக்கல் மாவட்ட பகுதி டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதித்தது.அப்போது திருப்பூர் மாவட்ட பகுதியில்,

மடத்துக்குளம் : மடத்துக்குளம் மற்றும் கொமரலிங்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், பறிமுதல் செய்யப்பட்ட 2,118 மது பாட்டில் அழிக்கப்பட்டன.

கொரோனா பாதிப்பால் கடந்த மாதம் வரை, தளர்வு இல்லாத ஊரடங்கு அமலில் இருந்தது. இதற்கு பின்பு சில தளர்வுகள் ஏற்படுத்தி, திண்டுக்கல் மாவட்ட பகுதி டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதித்தது.அப்போது திருப்பூர் மாவட்ட பகுதியில், டாஸ்மாக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், அருகில் உள்ள மாவட்டத்திற்குச்சென்று, மது பாட்டில்கள் வாங்கிய 'குடி'மகன்கள் சட்டவிரோதமாக வாகனங்களில், மறைத்து வைத்து மடத்துக்குளம் பகுதிக்கு கொண்டு வந்தனர்.தகவலறிந்த போலீசார், தாலுகாவுக்கு உட்பட்ட செக்போஸ்ட் பகுதியில், வாகனச்சோதனையை தீவிரப்படுத்தினர் .

இந்த நடவடிக்கையால், மடத்துக்குளம் செக்போஸ்ட்டில், பல நபர்கள் கொண்டு வந்த, 818 பாட்டில்களும், கொமரலிங்கம் செக்போஸ்டில், 1,300 பாட்டில்களும், தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.இவை, ஸ்டேஷனில் இருப்பு வைக்கப் பட்டிருந்தன. பின், இந்தபாட்டில் மற்றும் குட்கா பாக்கெட்டுகளை அழிக்க உத்தரவு பெற்ற போலீசார், மடத்துக்குளம் மற்றும் கொமரலிங்கம் ஸ்டேஷன் வளாகங்களில் குழி தோண்டி, பாட்டிலில் இருந்த மதுவை அதில் ஊற்றி அழித்தனர். குட்கா பாக்கெட்டுக்கு தீ வைக்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X