பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் சோலார் பேனல் அவசியம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
உடுமலை : அரசு அலுவலகங்களில் சோலார் பேனல் அமைத்து, மரபுசாரா எரிசக்தியை அதிகரிக்க மின்வாரியம் தீவிரம் காட்ட வேண்டும். தனி நபர்கள் சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்து, அதனை மின்வாரியத்திற்கு வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை மற்றும் தமிழ்நாடு மின் துறையும் இணைந்து செயல்படுத்துகிறது.அதேநேரம், அரசுத்துறைக்கு சொந்தமான கட்டடங்களில்,

உடுமலை : அரசு அலுவலகங்களில் சோலார் பேனல் அமைத்து, மரபுசாரா எரிசக்தியை அதிகரிக்க மின்வாரியம் தீவிரம் காட்ட வேண்டும்.

தனி நபர்கள் சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்து, அதனை மின்வாரியத்திற்கு வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை மற்றும் தமிழ்நாடு மின் துறையும் இணைந்து செயல்படுத்துகிறது.அதேநேரம், அரசுத்துறைக்கு சொந்தமான கட்டடங்களில், சூரிய சக்தியைக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டும் வருகின்றன.அதன்படி, அரசு அலுவலகங்களில் பகல் நேரங்களில் தினசரி தேவைப்படும் மின்சாரத்தின் அளவிற்கு ஏற்ப திறன் கொண்ட 'பேனல்' அமைத்து, அதில் உற்பத்தியாகும் மின்சாரம் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.

விடுமுறை நாட்கள் மற்றும் பயன்பாட்டு திறனுக்கு எஞ்சிய மின்சாரத்தை, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தை உடுமலை நகரில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களுக்கு விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:மாநிலத்தில், அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கும் பொருட்டு, மரபு சாரா எரிசக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, மின்வாரிய அலுவலக மேற்கூரைகளில், 'பேனல்' அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு கட்டடங்களிலும், சோலார் பேனல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X