பொது செய்தி

தமிழ்நாடு

இணைய வழியில் சாதனை பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
நெகமம் : சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 38 மாணவ, மாணவியர், 118 மணி நேர, இணைய வழி உலக சாதனைக்காக கவிதை, ஓவிய போட்டிகளில் பங்கேற்றனர். முன்னாள் முதல்வர் காமராஜரின், 118வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரியை சேர்ந்த கவிவானில் கவிமன்றம் எனும் அமைப்பு, சர்வதேச மகளிர் கூட்டமைப்பு மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியன இணைந்து, இணைய வழி வாயிலாக, பள்ளி

நெகமம் : சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 38 மாணவ, மாணவியர், 118 மணி நேர, இணைய வழி உலக சாதனைக்காக கவிதை, ஓவிய போட்டிகளில் பங்கேற்றனர்.

முன்னாள் முதல்வர் காமராஜரின், 118வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரியை சேர்ந்த கவிவானில் கவிமன்றம் எனும் அமைப்பு, சர்வதேச மகளிர் கூட்டமைப்பு மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியன இணைந்து, இணைய வழி வாயிலாக, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஓவியம் மற்றும் கவிதைப்போட்டிகளை நடத்தின.உலக சாதனைக்காக, 118 மணி நேரம் இடைவிடாது போட்டிகள் நடத்தப்பட்டு, சாதனை படைத்துள்ளது. போட்டியில், சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 38 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

பள்ளி தலைமையாசிரியர் செல்வி, நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்தார்.இவர்களுக்கு, விரைவில், உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற தற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியை கவிவானில் கவிமன்ற நிறுவனர் கலாவிசு, சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பு தலைவர் ராஜூபீட்டர்சன், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X