பொது செய்தி

தமிழ்நாடு

வீடு தேடி சென்று போதனை அசத்தும் பள்ளி ஆசிரியர்கள்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
வால்பாறை : சோலையாறு எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் வீடுதேடி சென்று ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர். வால்பாறை, சோலையாறு எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 6 முதல் 8ம் வகுப்பு வரை, 30 மாணவர்கள் படிக்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையால், கடந்த ஓராண்டுக்கு மேலாக மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். 'ஆன்லைன்' வகுப்புக்கள்

வால்பாறை : சோலையாறு எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் வீடுதேடி சென்று ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்.

வால்பாறை, சோலையாறு எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 6 முதல் 8ம் வகுப்பு வரை, 30 மாணவர்கள் படிக்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையால், கடந்த ஓராண்டுக்கு மேலாக மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். 'ஆன்லைன்' வகுப்புக்கள் துவங்கப்பட்டாலும், எஸ்டேட் பகுதியில், நெட்ஒர்க் பிரச்னையால் மாணவர்கள் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், வால்பாறையில் மாணவர்கள் வசிக்கு வீடுகளுக்கே நேரடியாக சென்று, ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர்.

மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கராணி, முத்துலட்சுமி ஆகியோரை, மாணவர்களின் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'சோலையாறு எஸ்டேட் பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே, எஸ்டேட் தொழிலாளர்களின் குழந்தைகள் தான். மாணவர்கள் நலன் கருதி, அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே நேரில் சென்று பாடம் நடத்துகிறோம். மாணவர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X