தடுப்பூசி முகாம் கண்காணிப்பு: சிறப்பு அதிகாரிகள் நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாம் கண்காணிப்பு: சிறப்பு அதிகாரிகள் நியமனம்

Added : ஜூலை 22, 2021
Share
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதியில், தடுப்பூசி முகாம்களை கண்காணிக்க, சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். கிணத்துக்கடவு தாலுகா அளவில், நல்லட்டிபாளையம், சொக்கனுார் மற்றும் வடசித்துாரில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இம்மருத்துவமனைகள் வாயிலாகவும், கிராமங்களில் அமைக்கப்படும் சிறப்பு முகாம்களிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதியில், தடுப்பூசி முகாம்களை கண்காணிக்க, சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

கிணத்துக்கடவு தாலுகா அளவில், நல்லட்டிபாளையம், சொக்கனுார் மற்றும் வடசித்துாரில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இம்மருத்துவமனைகள் வாயிலாகவும், கிராமங்களில் அமைக்கப்படும் சிறப்பு முகாம்களிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப் படுகிறது.தடுப்பூசி செலுத்தும் பணியில், டோக்கன் வழங்குவது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், டோக்கன் வழங்குவதில் பிரச்னை ஏற்படாமல் இருக்க, சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளை மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது.

சொக்கனுார், சொலவம்பாளையம், நெ.10 முத்துார், பொட்டையாண்டிபுறம்பு, கோவிந்தாபுரம், தேவராயபுரம், சூலக்கல், எஸ்.மேட்டுப்பாளையம், முள்ளுப்பாடி, காணியாலம்பாளையம், குளத்துப்பாளையம், கோவில்பாளையம், சோழனுார், வரதனுார், கக்கடவு, தேவணாம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு, துணை தாசில்தார் கனகேஸ்வரி கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நல்லட்டிபாளையம், கோதவாடி, செட்டியக்காபாளையம், ஆண்டிபாளையம், சிறுகளந்தை, காட்டம்பட்டி, மன்றாம்பாளையம், பெரியகளந்தை, வடசித்துார், மெட்டுவாவி, பனப்பட்டி, குருநல்லிபாளையம், கொண்டம்பட்டி, அரசம்பாளையம் கிராமங்களுக்கு, கிணத்துக்கடவு மண்டல துணை தாசில்தார் சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிராமங்களில் நடக்கும் தடுப்பூசி முகாம்களை, சுகாதாரத்துறையினருடன் இணைந்து, சிக்கலின்றி முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X