பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு சான்றுகள் வழங்க சிறப்பு முகாம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சூலுார், : நுண்ணீர் பாசன திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகளுக்குத் தேவையான சான்றுகளை வழங்க, வரும் 24ம்தேதி, மாவட்டம் முழுக்க, சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளன. பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், நடப்பாண்டில் கோவை மாவட்டத்தில், 2,155 எக்டரில் செயல்படுத்தி, மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், இணையதளம் மூலமாக தங்கள் நில

சூலுார், : நுண்ணீர் பாசன திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகளுக்குத் தேவையான சான்றுகளை வழங்க, வரும் 24ம்தேதி, மாவட்டம் முழுக்க, சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளன.

பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், நடப்பாண்டில் கோவை மாவட்டத்தில், 2,155 எக்டரில் செயல்படுத்தி, மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், இணையதளம் மூலமாக தங்கள் நில உடமை ஆவணங்களை பதிவு செய்யவேண்டும்.விவசாயிகளின் அலைச்சலை குறைக்கும் வகையில், சிட்டா, அடங்கல், எப்எம்பி மற்றும் சிறு, குறு விவசாயி சான்று ஆகிய சான்றுகளை வழங்கும் வகையில், சிறப்பு முகாம்களை, மாவட்டம் முழுக்க உள்ள, உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடத்த, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வரும், ஜூலை 24 மற்றும் ஆக., 8ல் நடக்கும் முகாம்களில், வருவாய்த்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பங்கேற்று சான்றுகள் வழங்கவுள்ளனர்.மாற்றம் தேவை'சிறப்பு முகாம் நடத்தப்படுவதின் நோக்கம், விவசாயி களுக்கு உடனுக்குடன் சான்றுகள் வழங்க வேண்டும் என்பதே. ஆனால், சிறப்பு முகாமுக்கு வரும் முன்னரே விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை நடந்த முகாம்களில் இணையதளம் வாயிலாக பதிவு செய்தும், உடனுக்குடன் சான்றுகள் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது. ஒரு சிலருக்கு மட்டுமே சான்றுகள் கிடைத்தன. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.அதனால், இணையதளத்தின் மூலம் பதிவு செய்வதை விட, எழுத்துப்பூர்வமான சான்றுகளை உடனுக்கு உடன் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X