சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூஜை செய்வதாக கூறி 11 சவரன் கொள்ளை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி:கால் வலிக்கு பூஜை செய்வதாகக் கூறி, மூதாட்டியிடம் 11 சவரன் நகைகளை பறித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடுகின்றனர்.கள்ளக்குறிச்சி, காந்தி ரோட்டைச் சேர்ந்தவர் சீத்தாபதி மனைவி ராஜலட்சுமி, 63; சீத்தாபதி மெடிக்கல் ஸ்டோரில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலை, சீத்தாபதி வேலைக்கு சென்று விட்டார்.வீட்டில் ராஜலட்சுமியும், வயது முதிர்ந்த தாய் தேசம்மாளும்

கள்ளக்குறிச்சி:கால் வலிக்கு பூஜை செய்வதாகக் கூறி, மூதாட்டியிடம் 11 சவரன் நகைகளை பறித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடுகின்றனர்.

கள்ளக்குறிச்சி, காந்தி ரோட்டைச் சேர்ந்தவர் சீத்தாபதி மனைவி ராஜலட்சுமி, 63; சீத்தாபதி மெடிக்கல் ஸ்டோரில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலை, சீத்தாபதி வேலைக்கு சென்று விட்டார்.வீட்டில் ராஜலட்சுமியும், வயது முதிர்ந்த தாய் தேசம்மாளும் இருந்தனர். காலை 11:00 மணியளவில், அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் வந்து, ராஜலட்சுமியின் கால் வலிக்கு பூஜை செய்ய, சீத்தாபதி அனுப்பியதாக கூறியுள்ளார்.

பூஜையில் தங்க நகைகளை வைக்க வேண்டும் என அந்த நபர் கூறியதால், 11 சவரன் செயின்களை ராஜலட்சுமி கொடுத்துள்ளார்.கை, கால்களை கழுவி வருமாறு அந்த நபர் கூறியதால், குளியல் அறைக்குள் சென்றபோது அந்த நபர், கதவை மூடி, வெளியே தாழ்ப்பாள் போட்டு நகைகளுடன் தப்பிச் சென்றார். கள்ளக்குறிச்சி போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X