பொது செய்தி

தமிழ்நாடு

ஆழியாறில் திரண்ட சுற்றுலா பயணிகள்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஆனைமலை : ஆழியாறில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். பொள்ளாச்சி அடுத்த, வால்பாறை மலையடிவாரத்திலுள்ள ஆழியாறில், அணைப்பகுதியுடன் கூடிய பூங்கா, கவியருவி, வண்ண மீன் அருங்காட்சியகம் உள்பட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன.இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், நேற்று பக்ரீத்பண்டிகைக்கு அரசு விடுமுறை

ஆனைமலை : ஆழியாறில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

பொள்ளாச்சி அடுத்த, வால்பாறை மலையடிவாரத்திலுள்ள ஆழியாறில், அணைப்பகுதியுடன் கூடிய பூங்கா, கவியருவி, வண்ண மீன் அருங்காட்சியகம் உள்பட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன.இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், நேற்று பக்ரீத்பண்டிகைக்கு அரசு விடுமுறை என்பதால்,ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆழியாறு வந்திருந்தனர்.அணைப்பகுதியில் தேங்கியிருந்த நீரின் அழகை கண்டு ரசித்து, விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

அணையில் நீர் இருப்பு அதிகமாக உள்ளதால் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. கவியருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்ற மடைந்தனர். தடுப்பணை பகுதியில் அத்துமீறிகுளித்தனர். ஆழியாறில் பொழுது போக்குஅம்சங்கள் இல்லாததால், வால்பாறை பகுதிக்கு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X