மூன்று கால்கள் உள்ள 4 குடுவை கண்டெடுப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூன்று கால்கள் உள்ள 4 குடுவை கண்டெடுப்பு

Added : ஜூலை 22, 2021
Share
கிருஷ்ணகிரி:மயிலாடும்பாறை அகழாய்வில் மூன்று கால்கள் உள்ள நான்கு குடுவைகள், மூன்று கத்தி துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளி அருகே மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் அகழாய்வு துவங்கப்பட்டது. துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் ஆய்வு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இது குறித்து, அகழாய்வு
 மூன்று கால்கள் உள்ள 4 குடுவை கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி:மயிலாடும்பாறை அகழாய்வில் மூன்று கால்கள் உள்ள நான்கு குடுவைகள், மூன்று கத்தி துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளி அருகே மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் அகழாய்வு துவங்கப்பட்டது. துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் ஆய்வு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இது குறித்து, அகழாய்வு இயக்குனர் சக்திவேல் கூறியதாவது: மயிலாடும்பாறை சானரப்பன் மலையில், இறந்தவர்களை புதைக்கும் குழியின் நான்கு மூலைகளிலும், மூன்று கத்தி துண்டுகள், மூன்று கால்கள் உள்ள நான்கு சிறிய குடுவைகள், ஒரு தண்ணீர் குவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X