பொது செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரத்துக்கு பி.ஏ.பி., குடிநீர்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்துக்கு, கோவை மாவட்டம் பி.ஏ.பி., அணையில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்படும் என அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு, பி.ஏ.பி., விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே நடந்த சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் பங்கேற்ற உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, 'ஒட்டன்சத்திரத்தில் குடிநீர்

பொள்ளாச்சி : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்துக்கு, கோவை மாவட்டம் பி.ஏ.பி., அணையில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்படும் என அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு, பி.ஏ.பி., விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே நடந்த சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் பங்கேற்ற உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, 'ஒட்டன்சத்திரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, பரம்பிக்குளம் - ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம், 650 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது' என தெரிவித்துள்ளார். இதற்கு பி.ஏ.பி., விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறுகையில், ''பி.ஏ.பி., திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில், ஆழியாறு, பாலாறு படுகையில் நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம்பெறுகின்றன.

பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. ஒட்டன்சத்திரத்துக்கு கரூரில் இருந்து காவிரி நீர் வினியோகிக்கப்படுகிறது. மேலும், பாலாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், அமராவதி அணையும் உள்ளன. இந்நிலையில், ஒட்டன்சத்திரத்துக்கு பி.ஏ.பி., திட்டத்தில் இருந்து குடிநீர் கொண்டு செல்வோம் என கூறுவது ஏற்க முடியாது. இப்பிரச்னை, முதல்வர் மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார்.

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் செயலாளர் செந்தில் கூறுகையில், ''இருமாநில ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிலுவையில் உள்ள அணைகளை கட்ட, கேரள மாநிலம் ஒப்புதல் வழங்கவில்லை. பாசனத்துக்கு வரும் நீர், கடைமடைக்கு முழுமையாக கிடைப்பதில் சிரமம் உள்ளது. அமைச்சரின் அறிவிப்பு, வியப்பையும், வேதனையும் ஏற்படுத்தி உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X