பொது செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மதிய உணவு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரோட்டரி சங்கம் சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு, இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவரும், சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவருமான ஞானசேகரன் தலைமை வகித்தார்.இதன்படி, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, செவ்வாய்க் கிழமைதோறும் பரிசோதனைக்கு வரும், 100 கர்ப்பிணி பெண்களுக்கு, மதிய

மேட்டுப்பாளையம் : காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரோட்டரி சங்கம் சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு, இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவரும், சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவருமான ஞானசேகரன் தலைமை வகித்தார்.இதன்படி, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, செவ்வாய்க் கிழமைதோறும் பரிசோதனைக்கு வரும், 100 கர்ப்பிணி பெண்களுக்கு, மதிய உணவு இலவசமாக வழங்கப்பட உள்ளது.நிகழ்ச்சியில், காரமடை வட்டார தலைமை டாக்டர் சுதாகர், டாக்டர்கள் பிரசாத், பரமேஷ், நிவேதா, ரோட்டரி சங்க பட்டய தலைவர் சிவ சதீஷ்குமார், செயலாளர் மகேஷ், விநாயக வித்யாலயா பள்ளி நிர்வாகி நிர்மலாதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X