சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சந்தன மரம் வெட்ட முயற்சி நான்கு பேருக்கு அபராதம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வனவர் தாமஸ் தலைமையில், வனக்காப்பாளர்கள் மோகன்ராஜ், தினேஷ் ஆகியோர், கூடலுார் கவுண்டம்பாளையம் கட்டாஞ்சிமலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் அங்குள்ள காப்புக்காட்டில் வெளிச்சம் நகர்வதை உணர்ந்து, அப்பகுதியை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் உதவியுடன் சுற்றிவளைத்தனர். அங்கு, நான்கு பேர் வனப்பகுதியை

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வனவர் தாமஸ் தலைமையில், வனக்காப்பாளர்கள் மோகன்ராஜ், தினேஷ் ஆகியோர், கூடலுார் கவுண்டம்பாளையம் கட்டாஞ்சிமலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் அங்குள்ள காப்புக்காட்டில் வெளிச்சம் நகர்வதை உணர்ந்து, அப்பகுதியை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் உதவியுடன் சுற்றிவளைத்தனர். அங்கு, நான்கு பேர் வனப்பகுதியை ஒட்டிய பட்டா நிலத்தில், சந்தன மரம் வெட்ட முயற்சி செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரம்பம், வெட்டுக்கத்தி ஆகியவற்றை கைப்பற்றினர்.விசாரணையில், பிடிபட்டவர்கள் கேரள மாநிலம், மானந்தவாடி ஜாலி ஜேக்கப், 55; மன்னார்க்காடு, மொய்தீன்,44; நரசிம்மநாயக்கன்பாளையம் ஜெகதீஷ், 54; அத்திக்கடவு ராஜேந்திரன், 36 என தெரியவந்தது.பிடிபட்ட நால்வருக்கும் தலா 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X