பொல்லான் நினைவு நாள் தி.மு.க.,வினர் அஞ்சலி | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொல்லான் நினைவு நாள் தி.மு.க.,வினர் அஞ்சலி

Added : ஜூலை 22, 2021
Share
சூலுார் : ஆங்கிலேயருக்கு எதிராக போராடி உயிர் நீத்த, தளபதி பொல்லானுக்கு தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய தீரன் சின்னமலையின் தளபதியாக இருந்த பொல்லானின் நினைவு நாளை ஒட்டி, தி.மு.க., வினர் மலரஞ்சலி செலுத்தினர். முத்துக் கவுண்டன்புதுாரில், சூலுார் தெற்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் தன்ராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தளபதி

சூலுார் : ஆங்கிலேயருக்கு எதிராக போராடி உயிர் நீத்த, தளபதி பொல்லானுக்கு தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய தீரன் சின்னமலையின் தளபதியாக இருந்த பொல்லானின் நினைவு நாளை ஒட்டி, தி.மு.க., வினர் மலரஞ்சலி செலுத்தினர். முத்துக் கவுண்டன்புதுாரில், சூலுார் தெற்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் தன்ராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தளபதி பொல்லான் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.சூலுார் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன், கோவை கிழக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ரமேஷ், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர்கள் சுரேஷ், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X