பொது செய்தி

தமிழ்நாடு

ஆவின் மாட்டு தீவன மானியம் ரத்தா?

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம், : ஆவின் நிறுவனம், மாட்டு தீவனத்திற்கு வழங்கும் மானியத்தை, ரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகம் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆவின் நிறுவனம், பால் ஊற்றும் விவசாயிகளுக்கு, மானிய விலையில், கலப்பு மாட்டுத் தீவனம் வழங்குகிறது. ஒவ்வொரு விவசாயிகளும் மாதம் நான்கு அல்லது ஐந்து மூட்டைகள் கலப்பு தீவனத்தை, பால் கூட்டுறவு

மேட்டுப்பாளையம், : ஆவின் நிறுவனம், மாட்டு தீவனத்திற்கு வழங்கும் மானியத்தை, ரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகம் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆவின் நிறுவனம், பால் ஊற்றும் விவசாயிகளுக்கு, மானிய விலையில், கலப்பு மாட்டுத் தீவனம் வழங்குகிறது. ஒவ்வொரு விவசாயிகளும் மாதம் நான்கு அல்லது ஐந்து மூட்டைகள் கலப்பு தீவனத்தை, பால் கூட்டுறவு சங்கத்திலிருந்து வாங்கி, பசு மாடுகளுக்கு பசுந்தீவனத்துடன் கலந்து வழங்கி வருகின்றனர்.இதனால், விவசாயிகள் ஓரளவுக்கு பால் உற்பத்தியில், லாபம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆவின் நிறுவனம் கலப்பு தீவனத்திற்கு வழங்கப்படும், மானிய தொகையை, அடுத்த மாதத்திலிருந்து ரத்து செய்வதாக, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். மானியத்தை ரத்து செய்யாமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காரமடை வெள்ளியங்காடு, முத்துக்கல்லுார் குறிஞ்சி உழவர் மன்ற செயலாளர் தேவராஜ் கூறியதாவது:ஆவின் நிறுவனம், 50 கிலோ எடையுள்ள கலப்பு தீவன மூட்டையை, 990 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறது. இதில், 200 ரூபாய் மானியம் வழங்கி, விவசாயிகளிடம், 790 ரூபாய் பெறப்படுகிறது.

ஒவ்வொரு விவசாயிகளும் மாதம் நான்கு அல்லது ஐந்து மூட்டைகளை வாங்கி, பயன்பெறுகின்றனர். பசு மாடுகளுக்கு பசுந்தீவனம், கலப்பு தீவனம், உலர் தீவனம் என மூன்று வகை தீவனங்களை கலந்து கொடுக்கும் பட்சத்தில், பால் அதிக அளவில் கிடைக்கிறது.பாலில் உள்ள கொழுப்பை வைத்து, ஒரு லிட்டர் பால், 27 லிருந்து, 30 ரூபாய் வரை,கொள்முதல் விலையாக கொடுக்கப்படுகிறது. இதனால், பெரிய அளவில் விவசாயிகளுக்கு லாபம் ஏதும் கிடைப்பதில்லை.

பசு மாடுகளுக்கு, உலர் தீவனம் வெளியே வாங்கும் பொழுது, கடந்த இரண்டு மாதங்களை விட, இந்த மாதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆவின் நிறுவனம் கலப்பு தீவனத்துக்கு வழங்கிவந்த மானியத்தை, அடுத்த மாதத்திலிருந்து ரத்து செய்வதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள பல லட்சம் விவசாயி களுக்கு, நஷ்டம் ஏற்படும். இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, கலப்பு தீவனத்துக்கு வழங்கப்படும் மானியத்தை, ரத்து செய்யாமல் தொடர்ந்து வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X