சுகாதார நிலையங்களில் சப் - கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலையங்களில் சப் - கலெக்டர் ஆய்வு

Added : ஜூலை 22, 2021
Share
ஆனைமலை : ஆனைமலை, வளந்தாயமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சப் - கலெக்டர் ஆய்வு செய்தார். ஆனைமலை மற்றும் வளந்தாயமரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று மாலை, பொள்ளாச்சி சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ஆய்வு மேற்கொண்டார்.அந்தந்த சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா தொற்றால் பாதித்தோரின் விபரம், பரவலின் வீரியம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து

ஆனைமலை : ஆனைமலை, வளந்தாயமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சப் - கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆனைமலை மற்றும் வளந்தாயமரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று மாலை, பொள்ளாச்சி சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ஆய்வு மேற்கொண்டார்.அந்தந்த சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா தொற்றால் பாதித்தோரின் விபரம், பரவலின் வீரியம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், சுகாதார நிலையங்களின் நிலை, தேவை, மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். சுகாதார நிலையங்களை துாய்மையாக பராமரிக்க வேண்டும், கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு பரவலை தடுக்க வேண்டுமென, அறிவுரை வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X