பொது செய்தி

தமிழ்நாடு

திறந்தவெளிதான் கழிப்பிடம் கவனிக்குமா பேரூராட்சி?

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே, குப்பிச்சிபாளையம் கலைஞர் நகரில், கழிப்பிட வசதி இல்லாததால், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தும் அவலம் உள்ளது. கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன், அருந்ததிய குடும்பங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக, குப்பிச்சிபாளையத்துக்கு கிழக்கே இடம் கையகப்படுத்தப்பட்டு, இலவச தொகுப்பு

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே, குப்பிச்சிபாளையம் கலைஞர் நகரில், கழிப்பிட வசதி இல்லாததால், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தும் அவலம் உள்ளது.

கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன், அருந்ததிய குடும்பங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக, குப்பிச்சிபாளையத்துக்கு கிழக்கே இடம் கையகப்படுத்தப்பட்டு, இலவச தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன.குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்ட நிலையில், கழிப்பிடம் மட்டும் கட்டப்படவில்லை. இதுகுறித்து, இப்பகுதி மக்கள் கூறியதாவது: இங்கு கழிப்பிடம் கட்டித் தரவேண்டும் என கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

ஆனால், பேரூராட்சி நிர்வாகம் கட்டித்தர மறுக்கிறது.தொலைவில் உள்ள ரயில்வே பாலத்துக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்திற்கு செல்ல கட்டாயப்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் பெண்கள் அங்கு செல்லமுடியாது. பாம்புகள் நடமாட்டம் உள்ளது. முதியோர்கள், குழந்தைகள் வீதிகளில் உள்ள சாக்கடைகளையே கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய அவலம் நீடிக்கிறது.இப்பகுதியில் உள்ள ரிசர்வ் சைட்டிலேயே கழிப்பிடம் கட்டித்தந்தால், உதவியாக இருக்கும். மேலும், தொகுப்பு வீடுகள் கட்டி பல ஆண்டுகளானதால், பழுதடைந்துள்ளன.சாக்கடைகளும் துார்ந்து விட்டன.

இதில், கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுத் தொல்லையும் அதிகமாகி, நோய் தொற்று ஏற்படுகிறது.வீடுகள் மற்றும் சாக்கடைகளை புதுப்பித்துத் தர வேண்டும். வீணாக்கிடக்கும் பயிற்சி மையக் கட்டடத்தை சமுதாயக்கூடமாக மாற்றினால், ஏழைக்குடும்பங்கள், திருமணம் உள்ளிட்ட விஷேசங்களை இங்கு இலவசமாக நடத்த முடியும். இவற்றை, மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X