பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் பிரதோஷ பூஜை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி பூங்கா நகர் மலையாண்டிஸ்வரர் கோவிலில், ஆடி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை நடந்தது.பொள்ளாச்சி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி பூங்கா நகர் மலையாண்டிஸ்வரர் கோவிலில், ஆடி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை நடந்தது.பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு ருத்ரலிங்கேஸ்வரர்மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ருத்ரலிங்கேஸ்வரர்அருள்பாலித்தார்.

ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி ஜோதிலிங்கேஸ்வரர்மற்றும் நந்திகேஸ்வரருக்கு அபிேஷக பூஜைகள்நடந்தன.ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் ராமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, நேற்று ஆடி மாத முதல் பிரதோஷ பூஜை நடந்தது.
பூஜையில், மாலை, 5:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், விபூதி உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. மாலை, 6:10 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X