கேரளாவில் கொரோனா தொடர்ந்து அதிகரிப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளாவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 17,481ஆக அதிகரித்தது. நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,45,993 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 17,481 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு 11.97 சதவீதமாக அதிகரித்தது. 14,131 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கடந்த சில நாட்களில் 105 பேர் இறந்ததால், பலி எண்ணிக்கை 15, 617ஆக அதிகரித்தது. 1,29,640 பேர்

மூணாறு:கேரளாவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 17,481ஆக அதிகரித்தது.

நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,45,993 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 17,481 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு 11.97 சதவீதமாக அதிகரித்தது. 14,131 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கடந்த சில நாட்களில் 105 பேர் இறந்ததால், பலி எண்ணிக்கை 15, 617ஆக அதிகரித்தது. 1,29,640 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையிலும், 4,06,370 பேர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.

மாவட்டம் வாரியாக நேற்று பாதிப்பு எண்ணிக்கை:மலப்புரம் -2318, எர்ணாகுளம்- 2270, கோழிகோடு- 2151 ,திருச்சூர்- 1983, பாலக்காடு- 1394, கொல்லம்- 1175, திருவனந்தபுரம்-1166, கோட்டயம்- 996, ஆலப்புழா- 969, கண்ணுார்- 777, காசர்கோடு-776, பத்தினம்திட்டா- 584, வயநாடு- 475, இடுக்கி -447.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X