சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.600 கோடி மெகா மோசடி? பா.ஜ., நிர்வாகி தலைமறைவு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:கும்பகோணத்தில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக, பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மறையூரைச் சேர்ந்த சகோதரர்கள் கணேஷ்-, 50; சுவாமிநாதன், 47. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வசிக்கின்றனர். கும்பகோணத்தில் விக்டரி பைனான்ஸ், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை வைத்து உள்ளனர்.

தஞ்சாவூர்:கும்பகோணத்தில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக, பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மறையூரைச் சேர்ந்த சகோதரர்கள் கணேஷ்-, 50; சுவாமிநாதன், 47. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வசிக்கின்றனர். கும்பகோணத்தில் விக்டரி பைனான்ஸ், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை வைத்து உள்ளனர். வெளிநாடுகளிலும் தொழில் செய்து வரும் இவர்கள், சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்து உள்ளனர். கணேஷ், பா.ஜ., கட்சியின் வர்த்தக பிரிவில் பொறுப்பில் இருந்தார்.

இவர்களுக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஓராண்டில் இரட்டிப்பாக பணம் திருப்பித் தரப்படும் என அறிவித்து, பொதுமக்களிடம் வசூல் செய்துள்ளனர்.இதற்காக ஏஜன்டுகள் நியமித்து, அவர்களுக்கு கமிஷன் கொடுத்து உள்ளனர். இந்நிலையில், கோடிக்கணக்கில் பணம் செலுத்திய பலருக்கும், கொரோனாவை காரணம் காட்டி, பணத்தை முறையாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா - - பைரோஜ் பானு தம்பதி, கணேஷ், சுவாமிநாதன் 15 கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக, தஞ்சாவூர் எஸ்.பி., தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் கடந்த வாரம் புகார் அளித்தனர். டி.ஐ.ஜி., பிரவேஷ் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு பைனான்ஸ் நிறுவன ஊழியர்களிடம் விசாரித்தனர்.

மேனேஜர் ஸ்ரீகாந்தன் என்பவரை கைது செய்த போலீசார், நேற்று காலை கணேஷ் வீட்டில் சோதனை நடத்தினர். கணேஷ், சுவாமிநாதன் மற்றும் இருவர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர். இதற்கிடையே, கும்பகோணத்தில் 600 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டியவர்கள் யார் எனவும் போலீசார் விசாரிக்கின்றனர். பதவி பறிப்புகணேஷ் மீது புகார்கள் வருவதால், அவரை வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் இருந்து விடுவிப்பதாக, மாவட்ட பா.ஜ., தலைவர் சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X