கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறைத்துறை காலியிடங்கள் நிரப்ப ஐகோர்ட் அறிவுரை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மதுரை:சிறைத்துறை காலி பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில், அதிகாரிகள் விரைந்து முடிவெடுக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளைஅறிவுறுத்தியது.மதுரை, சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக சிறைகளில் 24 கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கைதிகளை விடுவிப்பது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. கீழ்நிலை

மதுரை:சிறைத்துறை காலி பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில், அதிகாரிகள் விரைந்து முடிவெடுக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளைஅறிவுறுத்தியது.

மதுரை, சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக சிறைகளில் 24 கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கைதிகளை விடுவிப்பது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. கீழ்நிலை ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.

கைதிகளின் குடும்பத்திற்கு நல உதவி செய்வது, கவுன்சிலிங் அளிப்பது, சமூக நல அலுவலர்கள் பணி. இப்பணியிடங்களில் 12 காலி இடங்கள் உள்ளன. மத்திய சிறைகள், பெண்கள் சிறைகள், புதுக்கோட்டை இளங்குற்றவாளிகள் சீர்திருத்தப் பள்ளியில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழக உள்துறை, கூடுதல் தலைமை செயலர், சிறைத்துறை டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி, 'மனுதாரர், முக்கியமான பிரச்னையை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். சிறை நிர்வாகத்தில் உள்ள நடைமுறை சிரமங்களைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் தகுந்த முடிவெடுக்க இந்நீதிமன்றம் வலியுறுத்துகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X