லாரி உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு கெடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லாரி உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு 'கெடு'

Added : ஜூலை 22, 2021
Share
நாமக்கல்:''டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆக., 9ம் தேதிக்குள் மத்திய - மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்,'' என, 'சிம்டா' பொதுச் செயலர் சண்முகப்பா கூறினார்.தென்மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்கமான, 'சிம்டா' செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், தலைவர் கோபால் நாயுடு தலைமையில் நாமக்கல்லில்
 லாரி உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு 'கெடு'

நாமக்கல்:''டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆக., 9ம் தேதிக்குள் மத்திய - மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்,'' என, 'சிம்டா' பொதுச் செயலர் சண்முகப்பா கூறினார்.

தென்மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்கமான, 'சிம்டா' செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், தலைவர் கோபால் நாயுடு தலைமையில் நாமக்கல்லில் நடந்தது. பின், அதன் பொதுச் செயலர் சண்முகப்பா அளித்த பேட்டி:ஓராண்டில் டீசல் விலை 28 ரூபாய் உயர்ந்துள்ளது. உடனடியாக மத்திய - மாநில அரசுகள் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பதாக அறிவித்துள்ளார். அதை இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியாக அவர் செயல்படுத்தினால், அனைத்து மாநிலங்களும் குறைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்.தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 33ல் ஏற்கனவே வசூல் முடிந்து விட்டது. அதில், கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவற்றை மூட வேண்டும்.எங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, மத்திய - மாநில அரசுகளுக்கு ஆக., 9 வரை கெடு விதித்திருக்கிறோம். அதற்குள் எங்களை அழைத்து பேசி, சுமுகமான முடிவை எடுக்கா விட்டால், அவசர கூட்டத்தை கூட்டி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X