பொது செய்தி

தமிழ்நாடு

'மோகித்' ரகம் வேணுமா? 35,000 'ரெடி'

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : கல்லாறு தோட்டக்கலை பண்ணையில், 35 ஆயிரம் பாக்கு நாற்றுகள் உட்பட, 65 ஆயிரம் நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. மேட்டுப்பாளையம் -ஊட்டி சாலையில் கல்லாறு மலைப்பகுதியில், 24 ஏக்கர் நிலப்பரப்பில், அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது.இங்கு பழ மரங்களும், வாசனை திரவிய மரங்கள், செடிகள், அலங்கார செடிகள் உள்ளன. இந்த நாற்றுகள் உற்பத்தி செய்து,

மேட்டுப்பாளையம் : கல்லாறு தோட்டக்கலை பண்ணையில், 35 ஆயிரம் பாக்கு நாற்றுகள் உட்பட, 65 ஆயிரம் நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.

மேட்டுப்பாளையம் -ஊட்டி சாலையில் கல்லாறு மலைப்பகுதியில், 24 ஏக்கர் நிலப்பரப்பில், அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது.இங்கு பழ மரங்களும், வாசனை திரவிய மரங்கள், செடிகள், அலங்கார செடிகள் உள்ளன. இந்த நாற்றுகள் உற்பத்தி செய்து, மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.இதுகுறித்து பண்ணை மேலாளர் ஹரி பாஸ்கர் கூறியதாவது:அரசு பண்ணையில் மரம், அலங்கார செடிகள், வாசனை திரவிய செடிகளின் நாற்றுகள் உற்பத்தி செய்து, விற்பனை செய்யப்படுகிறது.

இயற்கை சூழ்ந்த பகுதி என்பதால், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்ட பிறகு, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.பண்ணையில், 35 ஆயிரம் மோகித் ரக பாக்கு நாற்றுகளும், 10 ஆயிரம் அலங்காரச் செடி நாற்றுகள்,10 ஆயிரம் காப்பி நாற்றுகள், 10 ஆயிரம் சில்வர் ஓக் மர நாற்றுகள் என, 65 ஆயிரம் தரமான நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. மொத்தமாகவும் சில்லரையாகவும் நாற்றுகள் விற்பனை செய்யப்படும். தேவைப்படுவோர் அணுகலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X