சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மும்முனை மின்சாரம் எப்போது வரும்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை வட்டாரத்தில், மும்முனை மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் எனத் தெரியாததால், விவசாயிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை ஊராட்சிக்குட்பட்ட காளிபாளையம், சாமநாயக்கன்பாளையம், வெள்ளமடை உள்ளிட்ட பகுதிகளில், கிணற்றுப்பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயிகள், அதற்காக மும்முனை

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை வட்டாரத்தில், மும்முனை மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் எனத் தெரியாததால், விவசாயிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை ஊராட்சிக்குட்பட்ட காளிபாளையம், சாமநாயக்கன்பாளையம், வெள்ளமடை உள்ளிட்ட பகுதிகளில், கிணற்றுப்பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயிகள், அதற்காக மும்முனை மின்சாரத்தை எதிர்பார்த்துள்ளனர். ஆனால், மும்முனை மின்சாரம் குறித்த நேரத்தில் வராததால், மின்சாரம் எப்போது வரும் என, காத்துக்கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, வெள்ளமடை வட்டார விவசாயிகள் கூறியதாவது:முன்பு குறிப்பிட்ட நேரத்துக்கு, மும்முனை மின்சாரம் வரும். கடந்த இரண்டு மாதங்களாக மும்முனை மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என, தெரியவில்லை. இதனால், காய்கறி உள்ளிட்ட பயிர்களுக்கு, சரியான இடைவெளியில், நீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கிறோம். மும்முனை மின்சாரம் எப்போது வரும் என எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியுள்ளதால், பிற வேலைகளையும் பார்க்க முடியவில்லை.எனவே, எந்த ஷிப்டில் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என்பதை வெளிப்படையாக அறிவித்து, தடையில்லாமல் வழங்க, மின்வாரியம் முன்வர வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X