பொது செய்தி

தமிழ்நாடு

ஜாதி மற்றும் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் டி.வி.ஆர்.,

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மதுரை:''ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசநலனுக்காக பாடுபட்டவர்டி.வி.ஆர்.,'' என, மதுரை ஆகாஷ் பேமிலி கிளப் நிர்வாக இயக்குனர் பாலாஜி பேசினார்.'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 37வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்க அலுவலகத்தில் நடந்த, 'நோட் - புக்' வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அன்றைய நாஞ்சில் நாட்டை,
 ஜாதி மற்றும் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் டி.வி.ஆர்.,

மதுரை:''ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசநலனுக்காக பாடுபட்டவர்டி.வி.ஆர்.,'' என, மதுரை ஆகாஷ் பேமிலி கிளப் நிர்வாக இயக்குனர் பாலாஜி பேசினார்.

'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 37வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்க அலுவலகத்தில் நடந்த, 'நோட் - புக்' வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அன்றைய நாஞ்சில் நாட்டை, தமிழகத்துடன் இணைக்க உறுதியான ஆயுதம் வேண்டும்; அந்த ஆயுதம் நாளிதழ் என உணர்ந்த டி.வி.ஆர்., அவரது பூர்வீக சொத்துக்கள், வருமானம் அனைத்தையும் நாளிதழ் என்ற பெரும் கடலில் கொட்டினார்.

நாஞ்சில் மக்களுக்காக மட்டுமல்ல, ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தேச நலனுக்காக பாடுபட்டவர்.தனக்கென்று தனிப் பெருமை கொண்டிருந்த அன்றைய நாஞ்சில் நாடான இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளாவிடம் இருந்து மீட்டார்.குன்றிலிட்ட விளக்காக சுடரொளி வீசும் டி.வி.ஆர்., மறைந்தும், அவர் எழுத்துக்கள் வழியாக நமக்கெல்லாம் வழிகாட்டி கொண்டிருக்கிறார்.இவ்வாறு அவர் பேசினார்.

மாநில துணை பொதுச் செயலர் இல.அமுதன், மாவட்ட தலைவர் பக்தவத்சலம், நகரச் செயலர் பாபு, எஸ்.எஸ்.காலனி கிளை நிர்வாகி வெங்கடாசலம், மாவட்ட முன்னாள் பொருளாளர் விஜயன், இளைஞரணி செயலர் மீனாட்சி சுந்தரம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X