சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி 12 டன் பறிமுதல்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.திருப்பூர், முருகம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்கப்படுவதாக புகார் வந்தது. மாவட்ட குடிமைப் பொருள் பறக்கும் படை தாசில்தார் சுந்தரம் தலைமையிலான குழுவினர், குறிப்பிட்ட பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது, பூட்டியிருந்த ஒரு வீட்டை
 ரேஷன் அரிசி 12 டன் பறிமுதல்

திருப்பூர்:திருப்பூரில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர், முருகம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்கப்படுவதாக புகார் வந்தது. மாவட்ட குடிமைப் பொருள் பறக்கும் படை தாசில்தார் சுந்தரம் தலைமையிலான குழுவினர், குறிப்பிட்ட பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது, பூட்டியிருந்த ஒரு வீட்டை திறந்து பார்த்தபோது, வீடு முழுதும் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன.

பறக்கும் படை அதிகாரிகள் கூறுகையில், 'தலா 50 கிலோ என்ற அளவில், 250 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை முழுமையாக கணக்கிட்டு, நுகர்பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்படும். ரேஷன் அரிசியை கடத்தி பதுக்கிய நபர்கள் மீது, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் வழக்கு பதிந்துநடவடிக்கை எடுப்பர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X