'டெல்டா' வகை கொரோனா ; ஜோ பைடன் எச்சரிக்கை

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று, ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில், அமைச்சரவைக் குழுவின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. இதில், ஜோ பைடன் பேசியதாவது: மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தப்படுவதால், கடந்த ஆறு மாதங்களில் கொரோனா நோயாளிகள் இறப்பு, 90 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், கொரோனாவின் உருமாறிய 'டெல்டா' வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்து

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று, ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில், அமைச்சரவைக் குழுவின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.



latest tamil news



இதில், ஜோ பைடன் பேசியதாவது: மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தப்படுவதால், கடந்த ஆறு மாதங்களில் கொரோனா நோயாளிகள் இறப்பு, 90 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், கொரோனாவின் உருமாறிய 'டெல்டா' வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதனால், தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தான், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அதுபோல, தடுப்பூசி செலுத்த தவறியோர் தான் இறக்கின்றனர்.


latest tamil news



எனவே, அடுத்த கட்டமாக, தடுப்பூசி போடாமல் உள்ளோருக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை நோக்கி செயல்பட வேண்டும். மக்கள் எச்சரிக்கை உணர்வுடன், தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-202105:34:44 IST Report Abuse
ராஜா அவசரப்பட்டு மாஸ்க்கை கழட்ட சொல்லியாச்சு, இப்போ எச்சரிக்கை விட்டால் யார் கேட்பார்? கொரோனா முற்றிலுமாக நம்மை விட்டுவிடவில்லை. மேற்கில் இருந்து தான் இந்த உலக அழிவு ஆரம்பம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X