சில வரி செய்திகள்....:மாவட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்....:மாவட்டம்

Added : ஜூலை 22, 2021
Share
'போக்சோ'வில் இருவர் கைதுஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 30, என்பவர் கடத்தி திருமணம் செய்தார். புகார்படி சந்தோஷ்குமார் மீது, 'போக்சோ' வழக்கு பதிந்து கைது செய்தனர். சந்தோஷ்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதேபோல், ஓல்டு ஊட்டியில் 16 வயது சிறுமியை, ஸ்ரீ,
 சில வரி செய்திகள்....:மாவட்டம்

'போக்சோ'வில் இருவர் கைது

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 30, என்பவர் கடத்தி திருமணம் செய்தார். புகார்படி சந்தோஷ்குமார் மீது, 'போக்சோ' வழக்கு பதிந்து கைது செய்தனர். சந்தோஷ்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதேபோல், ஓல்டு ஊட்டியில் 16 வயது சிறுமியை, ஸ்ரீ, 20, என்பவர் கடத்தி சென்றுள்ளார். இருவரையும் கோவையில் மீட்ட போலீசார், ஊட்டிக்கு அழைத்து வந்தனர். வாலிபர் மீது, 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

யானை தாக்கி இருவர் பலி

கூடலுார்: நீலகிரி மாவட்டம் முதுமலை மாவனல்லா பகுதியில் வசித்து வந்தவர் இருதயராஜ், 65. இவர் நேற்று காலை 6:30 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் மசினகுடி சென்றார். சாலையோரம் இருந்த காட்டு யானை, அவரை தாக்கியது. படுகாயம் அடைந்தவரை, ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிரிழந்தார்.

* கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கோரம்பாறையைச் சேர்ந்தவர் விமலா, 45; கணவர் மற்றும் இரு மகன்களுடன், நேற்று தலக்குளம் பகுதியில் உள்ள ஏலத்தோட்டத்தில் வேலை செய்தார்.பலத்த மழை பெய்தது. அங்கு முகாமிட்டிருந்த நான்கு காட்டு யானைகளை விமலா அறியவில்லை. மதியம் 2:30 மணிக்கு காட்டு யானைகள் தாக்கியதில் விமலா இறந்தார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

4,320 மது பாட்டில்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள இருங்களூரில் லாரன்ஸ், 50, என்பவரின் வீட்டில், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டில் சோதனை நடத்தி 4,320 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 6 லட்சம் ரூபாய். லாரன்சை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X