சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆவின் பாலில் தண்ணீர்? இயக்குனர்கள் 'போஸ்டர்'

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஆரணி:'ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்யும் தலைவரை கைது செய்ய வேண்டும்' என, ஆரணி நகரம் முழுதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஆரணி ஆவின் பால் கூட்டுறவு சங்கம் உள்ளது. இதன் தலைவராக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த குமுதவள்ளி, துணைத் தலைவராக சுப்பிரமணியன், செயலராக சரவணன் மற்றும் எட்டு இயக்குனர்கள் உள்ளனர். இந்நிலையில் சங்கத்தைச்

ஆரணி:'ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்யும் தலைவரை கைது செய்ய வேண்டும்' என, ஆரணி நகரம் முழுதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஆரணி ஆவின் பால் கூட்டுறவு சங்கம் உள்ளது. இதன் தலைவராக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த குமுதவள்ளி, துணைத் தலைவராக சுப்பிரமணியன், செயலராக சரவணன் மற்றும் எட்டு இயக்குனர்கள் உள்ளனர். இந்நிலையில் சங்கத்தைச் சேர்ந்த இயக்குனர்களே, ஆரணி நகர் முழுதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

அதில், 'ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில், விதிகளை மீறி பணியாளர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்று நியமித்துள்ளனர். குழந்தைகள் குடிக்கும் பாலில் தண்ணீரை கலந்து, 'டேங்கர்' லாரி மூலம் குளிரூட்டும் நிறுவனத்திற்கு அனுப்பி, பல லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.'ஆவின் சங்க வரவு - செலவுகளை கணக்கு காட்டாமல், தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து, சங்க பணத்தில் கோடிகளில் புரளும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வசூல் ராணி குமுதவள்ளியை கைது செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X