ஜெலட்டின் குச்சிகள் வெடித்தன | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜெலட்டின் குச்சிகள் வெடித்தன

Added : ஜூலை 22, 2021
Share
இடையகோட்டை:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஜவ்வாதுபட்டியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் ஒருவர் பலியானார்.இப்பகுதியை சேர்ந்த வேலுச்சாமி தோட்டத்தை சமன் செய்யும் பணியை அதே ஊரைச் சேர்ந்த நந்தகிரி 22, சூர்யா 22, செய்தனர். தோட்டத்தில்இருந்த பாறையை அகற்றும்போது ஏற்கனவே பாறைக்குள் வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடிக்காமல் இருந்துள்ளது. இது தெரியாமல்

இடையகோட்டை:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஜவ்வாதுபட்டியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் ஒருவர் பலியானார்.

இப்பகுதியை சேர்ந்த வேலுச்சாமி தோட்டத்தை சமன் செய்யும் பணியை அதே ஊரைச் சேர்ந்த நந்தகிரி 22, சூர்யா 22, செய்தனர். தோட்டத்தில்இருந்த பாறையை அகற்றும்போது ஏற்கனவே பாறைக்குள் வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடிக்காமல் இருந்துள்ளது. இது தெரியாமல் அருகிலேயே குழி தோண்டி உள்ளனர்.

அப்போது வெடிக்காமல் இருந்த வெடி வெடித்ததில் இருவரும் காயமடைந்தனர்.நந்தகிரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். சூர்யா கோவை மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளார். வேலுச்சாமி, சின்னப்பன், மணி, சூர்யா, நந்தகிரியிடம் இடையகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X