பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் சென்றவர் மரணம் நீதிபதியின் விசாரணை தொடர்கிறது

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி : போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற தொழிலாளி, உயிரிழந்தது குறித்த நீதிபதி விசாரணை நேற்றும் தொடர்ந்தது. கருமத்தம்பட்டி அடுத்த வேட்டைக்காரன் குட்டையைச் சேர்ந்தவர் மணி. கடந்த, 19 ம்தேதி நள்ளிரவு இவரது வீட்டுக்குள் நுழைய முயன்ற வடமாநில தொழிலாளியை அக்கம்பக்கத்தினர் பிடித்து கருமத்தம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்நபர் ஜார்க்கண்ட்

கருமத்தம்பட்டி : போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற தொழிலாளி, உயிரிழந்தது குறித்த நீதிபதி விசாரணை நேற்றும் தொடர்ந்தது.

கருமத்தம்பட்டி அடுத்த வேட்டைக்காரன் குட்டையைச் சேர்ந்தவர் மணி. கடந்த, 19 ம்தேதி நள்ளிரவு இவரது வீட்டுக்குள் நுழைய முயன்ற வடமாநில தொழிலாளியை அக்கம்பக்கத்தினர் பிடித்து கருமத்தம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்நபர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சஜேந்திரபிரசாத், 45 என்பது தெரிந்து.ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அவர், மறுநாள் உடல்நலக்குறைவால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.இதுகுறித்து சூலுார் கோர்ட் நீதிபதி வைஷ்ணவி விசாரணையை நேற்று முன்தினம் துவக்கினார்.

அரசு மருந்துவமனை மற்றும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சம்பவம் நடந்த இடத்தில் பொதுமக்களிடம் நேரிடையாக விசாரணை மேற்கொண்டார். மேலும், ஸ்டேஷனில் போலீசாரிடம் விசாரித்தார்.கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். நேற்று, மேலும் பல சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.விரைவில், இறுதி அறிக்கை வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X