பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு நீர்திறப்பு குறைப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தேக்கடி:பெரியாறு அணை நீர்திறப்பு 900 கனஅடியாக குறைக்கப்பட்டது.நீர்ப்பிடிப்பில் 2 வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் அணை நீர்மட்டம் உயர்ந்து வந்தது. தமிழக குடிநீர், சாகுபடிக்காக வினாடிக்கு 1200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்படும் என தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் குற்றம்சாட்டினர். நீர்திறப்பை குறைக்க

தேக்கடி:பெரியாறு அணை நீர்திறப்பு 900 கனஅடியாக குறைக்கப்பட்டது.நீர்ப்பிடிப்பில் 2 வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் அணை நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

தமிழக குடிநீர், சாகுபடிக்காக வினாடிக்கு 1200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்படும் என தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் குற்றம்சாட்டினர். நீர்திறப்பை குறைக்க வலியுறுத்தினர்.

இந்நிலையில் நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி நீர்திறப்பு 900 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 1344 கனஅடி நீர் வந்தது. அணை நீர்மட்டம் 130.10 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர் இருப்பு 4720 மில்லியன் கன அடியாகும். நீர்திறப்பு குறைப்பால் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் மின் உற்பத்தி 108ல் இருந்து 81 மெகாவாட்டாக குறைந்தது. நேற்று காலை முதல் நீர்ப்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X