சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முகநுாலில் சலுகை விலையில் பொருட்கள் ஆசையில் ரூ.21.83 லட்சம் இழந்த மாணவர்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:முகநுாலில் சலுகை விலையில் கேமரா, அலைபேசிகள் விற்பதாக கூறியதை நம்பி இன்ஜினியரிங் மாணவர் ரூ.21.83 லட்சத்தை இழந்தார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பூவளந்துாரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மகன் சந்தான பாரதி 22. இன்ஜினியரிங் படிக்கிறார். முகநுாலில் டிஜிட்டல் கேமரா ரூ.30 ஆயிரத்திற்கு விற்பதாக கூறப்பட்டிருந்தது.

ராமநாதபுரம்:முகநுாலில் சலுகை விலையில் கேமரா, அலைபேசிகள் விற்பதாக கூறியதை நம்பி இன்ஜினியரிங் மாணவர் ரூ.21.83 லட்சத்தை இழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பூவளந்துாரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மகன் சந்தான பாரதி 22. இன்ஜினியரிங் படிக்கிறார். முகநுாலில் டிஜிட்டல் கேமரா ரூ.30 ஆயிரத்திற்கு விற்பதாக கூறப்பட்டிருந்தது. சந்தானபாரதி அதில் குறிப்பிட்ட 87774 17282 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார்.

அதில் பேசிய நபர் இன்னும் பல விலை உயர்ந்த ஐபோன்கள், அலைபேசிகள் குறைந்த விலையில் தருவதாக கூறியுள்ளார்.இதனை நம்பிய அவர் ஜூன் 13 முதல் ஜூலை 20 வரை வெவ்வேறு வங்கி கணக்குகளில் பல தவணைகளாக ஆன்-லைன் பண பரிவர்த்தனை மூலம் ரூ.21.83 லட்சம் அனுப்பினார். ஆனால், பொருட்கள் வரவில்லை. முகநுாலில் அந்த பக்கமும் மாயமானது. மேலும் குறிப்பிட்ட அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X