பொது செய்தி

தமிழ்நாடு

வகுப்பெல்லாம் எப்படி போயிட்டிருக்கு? மாணவியர் வீட்டுக்கே சென்று ஆய்வு செய்த டி.இ.ஓ

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கோவை : பள்ளிகள் திறக்காத நிலையில், மாணவர்களின் கற்றல் நிலையை அறிய, குடியிருப்பு பகுதிகளுக்கே, நேரில் சென்று மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் திறக்காத நிலையில், கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் கையாளப்படுகின்றன. சில அரசுப்பள்ளிகளில், ஆசிரியர்கள் முறையாக வகுப்பு கையாள்வதில்லை என்ற புகார்
 வகுப்பெல்லாம் எப்படி போயிட்டிருக்கு?  மாணவியர் வீட்டுக்கே சென்று ஆய்வு செய்த டி.இ.ஓ

கோவை : பள்ளிகள் திறக்காத நிலையில், மாணவர்களின் கற்றல் நிலையை அறிய, குடியிருப்பு பகுதிகளுக்கே, நேரில் சென்று மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் திறக்காத நிலையில், கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் கையாளப்படுகின்றன. சில அரசுப்பள்ளிகளில், ஆசிரியர்கள் முறையாக வகுப்பு கையாள்வதில்லை என்ற புகார் எழுந்தது.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், வால்பாறை பகுதிகளில், மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்தார்.தொடர்ந்து, சிட்டி மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பாண்டியராஜசேகரன், கடந்த இரு வாரங்களாக, அரசுப்பள்ளி மாணவர்களின் வீட்டுக்கே சென்று, ஆய்வு செய்து வருகிறார்.

சின்னதடாகம், பன்னிமடை பகுதிகளில், நேற்று முன்தினம், மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று, அவர்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.இதில், பாடவாரியாக ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள், கல்வி தொலைக்காட்சி பார்வையிடுதல், ஆசிரியர்கள் மாணவர்களுடன் தொடர்பில் உள்ளார்களா என பல கேள்விகள் கேட்டுள்ளதோடு, வகுப்பு கையாளாத ஆசிரியர்கள் குறித்தும், மாணவர்களிடம் விசாரித்துள்ளார்.அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னிலையில், மாணவர்களுடன் உரையாடல் நடப்பதால், 'டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்கள் சிக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆய்வுப்பணிகளில், மற்ற மாவட்ட கல்வி அதிகாரிகளும் ஈடுபட்டால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கற்பித்தல் செயல்பாடுகள், முறையாக நடக்கும் என்ற, கருத்து எழுந்துள்ளது.டி.இ.ஓ., (சிட்டி) பாண்டியராஜசேகரனிடம் கேட்டபோது,'' சின்னதடாகம், பன்னிமடை பகுதிகளில், மாணவர்களின் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தேன். இதற்கு முன்பு, ராஜவீதி, உக்கடம் பகுதிகளில், மாணவர்களை சந்தித்தேன். இதுபோன்று ஆய்வு நடப்பதாக தெரிந்தால், ஆசிரியர்களும் முறையாக கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X