சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடத்தல் மணல் லாரியை விரட்டிய போலீசை தடுத்த தி.மு.க., வாகனம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
தேவகோட்டை:சருகணி ஆற்றில் மணல் திருடிய கும்பலை பிடிக்க சென்ற போலீசாரை தி.மு.க., கொடி கட்டி வந்த காரில் வந்து தடுத்தவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சருகணி ஆற்றில் 20 நாட்களுக்கு முன் லாரியில் மணல் திருடி சென்றனர். அங்கு வாகன சோதனையில் இருந்த போலீசார் லாரியை மறித்த போது நிற்காமல் சென்றதால் தொடர்ந்து அந்த லாரியை விரட்டினர்.

தேவகோட்டை:சருகணி ஆற்றில் மணல் திருடிய கும்பலை பிடிக்க சென்ற போலீசாரை தி.மு.க., கொடி கட்டி வந்த காரில் வந்து தடுத்தவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சருகணி ஆற்றில் 20 நாட்களுக்கு முன் லாரியில் மணல் திருடி சென்றனர். அங்கு வாகன சோதனையில் இருந்த போலீசார் லாரியை மறித்த போது நிற்காமல் சென்றதால் தொடர்ந்து அந்த லாரியை விரட்டினர். அப்போது போலீசார் லாரியை நெருங்கவிடாமல் தி.மு.க., கொடி கட்டி வெள்ளை நிற காரில் வந்த கும்பல் தடுத்தது. காரில் இருந்தவர் போலீஸ்காரர் ஒருவர் பெயரை சொல்லி தப்பிக்க முயன்றனர்.

போலீசாருக்கு தொடர்ந்து தி.மு.க.,வினர் வந்த கார் இடையூறு செய்ததால் மணல் லாரி தப்பியது. இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவியது. சருகணி வி.ஏ.ஓ., சந்திரா புகாரின்படி திருவேகம்புத்துார் போலீசார் பிரபுவை 38, கைது செய்து தப்பிய விஜய் 32 என்பவரை தேடி வருகின்றனர். மேலும் மணல் கடத்தலுக்கு துணை போன போலீஸ்காரர் குறித்து எஸ்.பி., செந்தில்குமார் விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X