பொது செய்தி

தமிழ்நாடு

அரசு உத்தரவை அலட்சியப்படுத்தும் தொடக்கக் கல்வி அதிகாரிகள்: ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மதுரை:'தமிழக அரசு உத்தரவை அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதால் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் ஓராண்டிற்கும் மேல் பதவி உயர்வு பெற முடியவில்லை' என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் 2018 நவ.,ல் நடத்திய அரசு உத்தரவு நகல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற 1,568 ஆசிரியர்கள் மீது ('17 ஆ' குற்ற குறிப்பாணை) நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மதுரை:'தமிழக அரசு உத்தரவை அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதால் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் ஓராண்டிற்கும் மேல் பதவி உயர்வு பெற முடியவில்லை' என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் 2018 நவ.,ல் நடத்திய அரசு உத்தரவு நகல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற 1,568 ஆசிரியர்கள் மீது ('17 ஆ' குற்ற குறிப்பாணை) நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின் ரத்து செய்யப்பட்டது. இதுபோல் 2019 ஜன.,யில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதும் இதே (17ஆ) நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவர்கள் மீதான நடவடிக்கை அரசு ரத்து செய்தது. இதன் தொடர்ச்சியாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2019-ல் இழந்த பதவி உயர்வை அந்தந்த தேதியில் இருந்தே வழங்கப்பட்டது. ஆனால் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுகிறது.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசகன் கூறுகையில் “அரசு உத்தரவிட்டும்தொடக்க கல்வி அதிகாரிகள் பிடிவாதமாக உள்ளனர். இவர்கள் அலட்சியத்தால் ஓராண்டிற்கும் மேல் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X