சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு ; கடனை கட்ட 'மெசேஜ்' வந்ததால் குழப்பம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஊட்டி : கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களுக்கு, பணத்தை கட்ட வந்த குறுஞ்செய்தியால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீலகிரியில், 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.அதில், 'விவசாயிகள் பெற்ற நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவிகுழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்,' என, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை, கடன்கள் குறித்து எந்த

ஊட்டி : கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களுக்கு, பணத்தை கட்ட வந்த குறுஞ்செய்தியால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரியில், 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.அதில், 'விவசாயிகள் பெற்ற நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவிகுழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்,' என, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை, கடன்கள் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. அரசின் தள்ளுபடி தேதி அறிவிப்பை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில்,'நகை கடனுக்கு தவணை தேதி முடிந்து விட்டது; அதற்கான தொகையை செலுத்த வேண்டும்,' என, சிலருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் வாஞ்சிநாதன் கூறுகையில்,''கடன் தள்ளுபடி அறிவிப்பில், பயிர் கடனுக்கு தேதி அறிவித்து அரசாணை வெளியிட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில், நகைகடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்களுக்கு இன்னும் தேதி அறிவித்து அரசாணை வெளியிடப்படவில்லை. இதில், சில வங்கிகளில், 'நகை கடனுக்கு தவணை தொகை கட்ட வேண்டும்,' என, குறுஞ்செய்தி வந்திருப்பது குறித்து எனக்கு தகவல் வந்தது. எதுவானாலும், அரசாணை வந்தால் மட்டுமே மற்ற விபரங்களை தெரிவிக்க முடியும்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X