பொது செய்தி

தமிழ்நாடு

அங்கக சான்றுக்கு விண்ணப்பிக்கும் விவசாயிக்கு என்னென்ன தேவை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கோவை : கோவையில் இயற்கை முறையில், விவசாயம் செய்வதில் பலர் ஆர்வமாக உள்ளனர். அங்கக சான்று பெறுவது அவசியமாகும். அதனால் அங்கக சான்று வேண்டி, விதைச்சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் அலுவலகத்துக்கு பலர், விண்ணப்பித்து உள்ளனர். கிணத்துக்கடவு பகுதி உள்ள ஏமூரில், புதிதாக அங்கக சான்றிதழ் வேண்டி பதிவு செய்த விவசாயிகள் தோட்டத்தை, மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று

கோவை : கோவையில் இயற்கை முறையில், விவசாயம் செய்வதில் பலர் ஆர்வமாக உள்ளனர். அங்கக சான்று பெறுவது அவசியமாகும். அதனால் அங்கக சான்று வேண்டி, விதைச்சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் அலுவலகத்துக்கு பலர், விண்ணப்பித்து உள்ளனர்.

கிணத்துக்கடவு பகுதி உள்ள ஏமூரில், புதிதாக அங்கக சான்றிதழ் வேண்டி பதிவு செய்த விவசாயிகள் தோட்டத்தை, மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் வானதி, நேரில் சென்று ஆய்வு செய்தார்.அதன் பின் அவர் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள், அங்ககச்சான்று பெற்ற பிறகே, உற்பத்தி செய்த விளைபொருட்களை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.சான்று பெற்ற பொருட்களுக்குதான், அதிக விலை கிடைக்கும். கோவையில் உள்ள அங்கக சான்றளிப்பு துறையில், பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, அங்கக சான்று வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு கட்டணமாக சிறு விவசாயிகளுக்கு, 2700 ரூபாயும், இதர விவசாயிகளுக்கு, 3200 ரூபாயும், விவசாயி குழுக்களுக்கு, 7200 ரூபாயும் விவசாய நிறுவனங்களுக்கு, 9400 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.விருப்பம் உள்ள விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, அங்ககச் சான்று பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X