கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உயர்நீதிமன்ற கிளை செய்திகள்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சிறை காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்மதுரை சின்னசொக்கிகுளம் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக சிறைகளில் 24 கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கைதிகளை விடுவிப்பது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. கீழ்நிலை ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. கைதிகளின் குடும்பத்திற்கு நல உதவி செய்வது, கவுன்சிலிங் அளிப்பது சமூக நல

சிறை காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

மதுரை சின்னசொக்கிகுளம் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக சிறைகளில் 24 கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கைதிகளை விடுவிப்பது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. கீழ்நிலை ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. கைதிகளின் குடும்பத்திற்கு நல உதவி செய்வது, கவுன்சிலிங் அளிப்பது சமூக நல அலுவலர்கள் பணி. இப்பணியிடம் 12 காலியாக உள்ளன. மத்திய சிறைகள், பெண்கள் சிறைகள், புதுக்கோட்டை இளங்குற்றவாளிகள் சீர்திருத்தப் பள்ளியில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழக உள்துறை(சிறை) கூடுதல் தலைமை செயலர், சிறை டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு உத்தரவு: மனுதாரர் முக்கியமான பிரச்னையை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். சிறை நிர்வாகத்திலுள்ள நடைமுறை சிரமங்களைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் தகுந்த முடிவெடுக்க இந்நீதிமன்றம் வலியுறுத்துகிறது என்றனர்.

கண்மாயில் வனத்துறை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு

ஸ்ரீவில்லிபுத்துார் ராமசுப்பு தாக்கல் செய்த பொதுநல மனு: வடக்கு ஸ்ரீவில்லிபுத்துாரில் வடமலைக்குறிச்சி கண்மாய் உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதியில் 4.73 ஏக்கரை வனத்துறை ஆக்கிரமித்துள்ளது. கட்டடம் கட்டி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு விருதுநகர் கலெக்டர் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு இருக்கக்கூடாது என உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன. அதனடிப்படையில் அரசு சட்டம் இயற்றியுள்ளது.

இதை பொருட்படுத்தாமல் அரசின் வனத்துறையே சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை செயலாளர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு உத்தரவு: விருதுநகர் கலெக்டர் ஒரு அதிகாரியை நியமித்து கண்மாயை ஆய்வு செய்ய வேண்டும். மனுவை பரிசீலித்து சட்டத்திற்குட்பட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர்.

பத்திரப்பதிவில் மோசடி மாவட்ட பதிவாளர் விசாரணை

திருநெல்வேலி தட்சிணாமூர்த்தி உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனு: எங்கள் தந்தை மற்றும் சித்தப்பா பெயர்களில் நாங்குனேரி அருகே இலங்குளத்தில் சில சர்வே எண்களில் நிலம் உள்ளது. இதற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் அனுபவித்து வருகிறோம். எங்களுக்கு தெரியாமல் போலியாக சிலரது பெயர்களில் பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இதனடிப்படையில் மோசடியாக 57 பத்திரப்பதிவுகள் நடந்துள்ளன.

கிராம நில ஆவணம், 'அ'பதிவேடு, சர்வே செட்டில்மென்ட் ஆவணங்களை ஆய்வு செய்யாமல் பதிவுத்துறை பதிவு செய்துள்ளது. மோசடி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என பதிவுத்துறையினர் மறுத்துவிட்டனர். விசாரணை கோரி திருநெல்வேலி மாவட்ட பதிவாளரிடம் (நிர்வாகம்) மனு அளித்தோம். விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு: இம்மனு திருநெல்வேலி மாவட்ட பதிவாளருக்கு (நிர்வாகம்) திருப்பி அனுப்பப்படுகிறது. மனுதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்டோர் விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். மூன்று மாதங்களில் விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.விசாரணைக்குபின், ஒருவேளை பத்திரப் பதிவானது போலி பட்டா அடிப்படையில் செய்யப்பட்டதாக தெரியவந்தால் அவ்விபரத்தை அதற்கான பதிவேட்டில் பதிவிட வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X