பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசுக்கு ஏ.இ.பி.சி., பாராட்டு தொழில் வளர்ச்சி மேம்பட உத்வேகம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருப்பூர் : தொழில் மேம்பாட்டு நிதி, 500 கோடி ரூபாய் ஒதுக்கியதற்காக, தமிழக முதல்வருக்கு, ஏ.இ.பி.சி., பாராட்டு தெரித்துள்ளது. இதுகுறித்து, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் :'முதலீட்டாளர்களின் முதல் முகவரி' விழாவில், 28 ஆயிரத்து 508 கோடி ரூபாய் முதலீட்டில், 40 திட்டங்களும், 83 ஆயிரத்து 482 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும்

திருப்பூர் : தொழில் மேம்பாட்டு நிதி, 500 கோடி ரூபாய் ஒதுக்கியதற்காக, தமிழக முதல்வருக்கு, ஏ.இ.பி.சி., பாராட்டு தெரித்துள்ளது.

இதுகுறித்து, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் :'முதலீட்டாளர்களின் முதல் முகவரி' விழாவில், 28 ஆயிரத்து 508 கோடி ரூபாய் முதலீட்டில், 40 திட்டங்களும், 83 ஆயிரத்து 482 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. புதிய அரசு பதவியேற்ற இரண்டு மாதங்களில், மிகப்பெரிய முதலீட்டை தமிழகத்தை நோக்கி ஈர்த்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஒற்றைச்சாளர இணையதளம் 2.0, தொழில் துவங்க தேவையான அனைத்து அனுமதிகளையும் எளிதாகவும், விரைவாகவும் பெற கைகொடுக்கும். ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே, 17 ஆயிரத்து 146 கோடி ரூபாய் முதலீட்டில், 44 ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும், 35 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.எங்களது கோரிக்கையை ஏற்று, திருப்பூரில், தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி, தொழில் பூங்காக்கள், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அமைக்க, 500 கோடி ரூபாய் தொழில் மேம்பாட்டு நிதி ஒதுக்கியிருப்பது மிகவும்மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக, ஏ.இ.பி.சி., சார்பில் நன்றி.இவ்வாறு, அவர் கடி தத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X