சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாக்டரிடம் ரூ.2.85 கோடி மோசடி கைதான இருவரை விசாரிக்க 'கஸ்டடி'

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
கோவை : கோவை டாக்டரிடம், ரூ.2.85 கோடி மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்த, மூன்று நாட்கள் கஸ்டடி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.கோவை ராயல்கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஷ்வரன் மருத்துவமனையை, விரிவாக்கம் செய்ய திட்டமிட்டார். இதற்கு கடன் ஏற்பாடு செய்து தருவதாக, 2020 அக்., மாதம் புதுக்கோட்டை, ஆலங்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம், 55 உள்ளிட்ட, 4

கோவை : கோவை டாக்டரிடம், ரூ.2.85 கோடி மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்த, மூன்று நாட்கள் கஸ்டடி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை ராயல்கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஷ்வரன் மருத்துவமனையை, விரிவாக்கம் செய்ய திட்டமிட்டார். இதற்கு கடன் ஏற்பாடு செய்து தருவதாக, 2020 அக்., மாதம் புதுக்கோட்டை, ஆலங்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம், 55 உள்ளிட்ட, 4 நபர்கள் தொடர்பு கொண்டு பேசினர்.அப்போது கமிஷன் தொகையாக, 2.85 கோடி ரூபாய் பெற்றவர்கள் மோசடி செய்தனர். இது குறித்து, மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த பன்னீர்செல்வம், 55 மற்றும் செல்வகுமார், 54 ஆகியோரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கடந்த, 15ம் தேதி கைது செய்தனர்.இவர்களிடம் விசாரணை நடத்த, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கஸ்டடி கேட்டு, கோவை ஜே.எம்., 7 நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இருவரிடமும் மூன்று நாட்கள் விசாரணை நடத்த, அனுமதி வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X